காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது: 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை (10-10-2022) பள்ளிகள் திறப்பு 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதி தொடக்கம்
    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதி தொடங்குகிறது.

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு நிறைவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகள் கடந்த 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன. இந்த நிலையில் விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதில் 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் நாளில் அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

இதேபோல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி ஒன்றிய அளவில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), 12-ந் தேதியும் நடைபெற உள்ளன. ஆசிரியர்களுக்கு பயிற்சியின் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

இதனால் மேற்கண்ட நாட்களில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சிக்கு வருவார்கள். மாணவர்கள் பள்ளி வரமாட்டார்கள். அவர்கள் 13-ந் தேதி வகுப்புக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments