மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்க்கவும், பாடங்களை புரிந்து படிக்கும் வகையிலும் புதிய ‘செயலி’ ஒன்றை பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
வருகைப்பதிவு
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், சில திட்டங்களை கொண்டுவருவதற்கு பாதையை வகுத்து கொடுத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதில் மிக முக்கியமான ஒன்று டிஜிட்டல் முறையிலான வருகைப்பதிவு திட்டம். இதன் மூலமாக 84 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றதை கண்டறிந்து, அவர்களிடம் காரணங்களை கேட்டு, மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்கிறது.
காலை உணவு திட்டம்
அதேபோல, மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டத்திலும் டிஜிட்டல் முறையால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலம் அதிகமானோர் பயனடைந்து இருக்கின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு வழிகாட்டியாக அமைந்ததும் டிஜிட்டல் முறையிலான புள்ளிவிவரங்கள்தான்.
அதில், அரசு பள்ளி மாணவர்களில் 47 சதவீதம் பேர் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது கண்டறியப்பட்டது. இதுபற்றிய தகவல் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை வாயிலாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் வாயிலாக கொண்டு வரப்பட்டதுதான் காலை உணவு திட்டம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதிய ‘செயலி’
அதுதவிர, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கும் டிஜிட்டல் வாயிலான புள்ளிவிவரங்களே கைகொடுக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்கும் வகையில் புதிய ‘செயலி’ ஒன்றையும் பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து வருகிறது. விரைவில் இதை மாணவர்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்வது தவிர்க்கப்படுவதோடு, அவர்களின் திறன், அவர்களுக்கான மேம்பட்ட கல்வியை எவ்வாறு வழங்குவது என்பது போன்ற பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.