தொடர் கனமழை.. புதுக்கோட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (அக்.10) விடுமுறை..



தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டது.

மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் .உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி மேற்கூறிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 10) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கும் நிலையில் கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments