புதுக்கோட்டை மாவட்ட காவலா்கள் 100 போ் ரத்த தானம்
புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் பயிற்சிக் காவலா்கள் 100 போ் ரத்ததானம் செய்தனா்.

மாவட்ட காவலா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா தலைமை வகித்தாா். ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகராஜ், ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு காவலா்களிடமிருந்து ரத்ததானம் பெற்று எடுத்துச் சென்றனா். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments