புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் 62 சதவீதம் இணைப்பு அடுத்த மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தி இருந்தது. இந்த பணிகள் தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் நேரிடையாக தாங்களே செல்போன் செயலி மூலம் இணைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 637 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 853 பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 62.51 சதவீதம் பேர் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இணைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments