கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு




    கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார், ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி சுதான்சு துலியா உத்தரவிட்டார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி பியுசி கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனுத் தாக்கல் செய்தனர்.

அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் அணிவது என்பது முஸ்ஸிம் மதத்தின கட்டாய நடைமுறை கிடையாது, அரசியலமைப்பு சட்டம் வழங்கும் மத சுதந்திரம் சில நியாயமான தடைகளுக்கு உட்பட்டதுதான்.

 சீருடை அணிய வேண்டிய அரசுக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது” என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் 15ம்தேதி உத்தரவிட்டது

இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் சிலர், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தை மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு ஆகியோர் அமர்வில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இன்று இரு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார், ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி சுதான்சு துலியா உத்தரவிட்டார்.

நீதிபதி ஹேமந்த் துலியா அளித்த தீர்ப்பில் “ ஒரு மாநில அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சீருடை முறையை கொண்டுவருவதற்கு அதிகாரம் இருக்கிறது. வகுப்புகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடைவிதிப்பதால் அவர்களின் கருத்துச் சுதந்திரத்திலும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திலும் தலையிடுவதாக அர்த்தம் இல்லை, மீறுவதாகவும் கருத முடியாது” எனத் தெரிவித்தார்


நீதிபதி சுதான்சு துலியா அளித்த தீர்ப்பில், “முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களின் விருப்பம், தேர்வுக்கு உட்பட்டது. இதை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது, கட்டுப்பாடு கொண்டுவரவும் முடியாது. முஸ்லிம் மதத்தில் பெண்கள் ஹிஜாப் அணியலாமா அல்லது வேண்டாமா அது மதத்தில் அத்தியாவசியமானதா என்று கர்நாடாக உயர் நீதிமன்றம் தீர்மானித்தது தவறானது. 

பெண்கள் கல்வி கற்பதுமுக்கியமானது. ஏற்கெனவே கிராமங்களில் பெண்கள் கல்வி கற்பதில் பல்வேறு தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள். ஆதலால் அரசுமும், சமூகமும் பெண்கள் கல்விக்கு ஹிஜாப்பை ஒரு தடையாக ஏற்படுத்தக்கூடாது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், கபில் சிபல், துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், ஹூஜிபா அஹமதி, கோலின் கோன்சல்வேஸ், மீனாட்சி அரோரா, சஞ்சய் ஹெக்டே, ஏம் தார், தேவதத்காமத், ஜெய்னாகோத்தா ஆகியோர் முஸ்லிம் மாணவிகளுக்காகவும், பெண்கள் உரிமை குழுக்களுக்காகவும், முஸ்லிம் அமைப்புகளுக்காகவும் வாதிடினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments