திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு வருகிற 21, 22-ம் தேதிகளில் நடக்கிறது






திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ தூரத்திற்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள அகல ரெயில் பாதையை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வருகிற 21, 22- ம்தேதிகளில் ஆய்வு செய்கிறார்.

தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்கு உட்பட்ட கரையோர பகுதியான திருத்து றைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையே 37கி.மீ தூரத்திற்கு ஏற்கனவே அமைந்தி ருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இந்த புதிய அகல ரெயில் பாதையை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபை குமார் ராய் வருகிற 21, 22-ந் தேதிகளில ஆய்வு செய்ய உள்ளார் என்று தெற்குரெயில்வே கட்டுமான அமைப்பு தெரிவித்துள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், மோட்டார் டிராலியில் பயணம் செய்து தண்ட வாளத்தின் வரையறைகள். சிக்னல்கள் மற்றும் சிறிய பாலங்களை ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து சிறப்பு ரெயிலில் பயணம் செய்து  அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வேயை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடன் இருப்பார்கள் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

டீசல் இஞ்சின் சோதனை 

37 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரெயில்பாதை அமைந்துள்ள வித்தனர். வழித்தடத்தில் கரியாப்பட்டி னம், குரவப்புலம், தோப்புத் துறை மற்றும் வேதாரண்யம் ஆகிய ரெயில் நிலையங்கள்அமைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் 79 சிறிய பாலங்களும், 4 ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அகல ரெயில் பாதை பணி நிறைவு பெற்றதையடுத்து தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பு மற்றும் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இணைந்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 100 கி.மீ வேகத்தில் டீசல் என்ஜின் முன்மாதிரி சோதனை நடத்தினர்.

இருந்தபோதிலும் தெற்கு பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு முடிந்து ஒப்புதல் வழங்கிய பிறகே இந்த வழித்தடத்தில் பயணி டீசல் என்ஜின் சோதனைகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப் படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆணையரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments