போடி-தேனி இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்





போடி-மதுரை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை ரெயில்பாதை பணிகள் முடிந்து தினந்ேதாறும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது போடி-தேனி வரையிலான அகல ரெயில் பாதை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. போடி-தேனி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கிடையே போடி-மூணாறு சாலையின் குறுக்காக இரட்டை வாய்க்கால் பகுதியில் ரெயில் தண்டவாளங்கள் இணைக்கும் பணி கடந்த 4-ந்தேதி நடந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.



இதையடுத்து தண்டவாளங்கள் இணைக்கும் பணி முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தண்டவாளம் அமைக்கப்பட்ட பகுதியில் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்ற காலை போடி-தேனி இடையே ரெயில் பாதையில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் தேனியில் இருந்து ரெயில் என்ஜின் கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் ஓட்டி சோதனை செய்தனர். இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments