இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி இந்த வழக்கு இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 8 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 8 மீனவர்களும் அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். 

சென்னை வந்த 8 மீனவர்களையும், மீன்வளத்துறை சார்பாக உதவி ஆய்வாளர் கனகராஜ் வரவேற்று அங்கிருந்து வாகனம் மூலம் அழைத்து வந்து புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக வீடு திரும்பிய மீனவர்களுக்கு மீனவ சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments