கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆகிய ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து   இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி -  ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆகிய ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் நவாஸ்கனி எம்பி வழங்கிய கோரிக்கை கடிதத்தில் ,

ஒன்றிய அரசு கடல் அட்டைக்கு தடை விதித்திருக்கிறது,
ஆனால் கடல் அட்டை என்பது அழியக்கூடிய  உயிரினம் அல்ல, பெருகக் கூடிய உயிரினம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்டை நாடுகளான இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடல் அட்டை பிடிப்பதற்கு தடையில்லை,

கடல் அட்டைக்கு நம்முடைய நாட்டில் தடை விதித்திருப்பதினால் மீன்பிடிக்கும் போது தவறுதலாக கடல் அட்டைகள் மீனவர்களின்  மீன்வளையில் சிக்கினாலும் அதற்கும் மீனவர்கள் தண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு கடல் அட்டைக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடையை நீக்க சாத்திய கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆகிய ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து இந்திய வனத்துறை பொது இயக்குனர் -டைரக்டர் ஜெனரல் அவர்களிடமும் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் அவர்களின் முன்னிலையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவஸ்கனி எம்பி விரிவான ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments