அறந்தாங்கி பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கமா? பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்
            தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி குடும்பத்தில் உள்ளவர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சமைத்து சாப்பிட்டு கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகையை கொண்டாட அறந்தாங்கி சுற்றுவட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அறந்தாங்கியில் உள்ள பெரிய தெரு, பட்டுக்கோட்டை சாலை, பேராவூரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் ஆடை, ஆபரணங்கள், இனிப்பு வாங்கி செல்ல கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடி பணத்தை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொருட்கள் வாங்குவதற்காக சிலர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

        அறந்தாங்கி பகுதியில் தற்போது கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அறந்தாங்கியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், தற்போது பண்டிகை காலம் என்பதால் வங்கிகளில் கள்ளநோட்டு நாள்தோறும் வருகிறது. இதனால் பொதுமக்கள் வணிக நிறுவனத்தார்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments