தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டப்படி அதிகபட்டமான அபராதம்
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ ஓட்டுனர்கள் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை இயக்க மறுத்தால் அவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.இதே போல ஒவ்வொரு விதிமுறை மீறலுக்கு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளது. போக்குவரத்து துறை . போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் 2ம் முறையும் அதே தவறை செய்யும் போது ரூ.1500 அபாதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் பொது இடங்களில் எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை நிறுத்துவார்கள் . பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் அளிக்கும் வகையில் சாலையில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 அபராதம், 2-வது முறை ரூ.2000 வசூலிக்கப்படும். தங்கள் விவரங்களை தவறாக அளித்தால் அதற்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் முதல் முறை ரு.1000 வசூலிக்கப்படும் அதே போல ரூ.1000 2-வது முறையாக அதே தவறை செய்தால் வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 முதல் முறையாகவும் இரண்டாவது முறையாக ரூ. 1500ம் வசூலிக்கப்பட உள்ளது. இதே போல கார்கள் , ஜீப் அதி வேகத்தில் இயக்கினால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும். ரூ 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளு்ளது.

சாலையில் ஒலிப்பானை அவசியமில்லாத இடத்தில் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 அபராதமும் , ஆம்புலன்சிற்கு வழி விட மறுத்தால் ரூ.10,000 விதிக்கப்படும். இதே போல அவசர கால வாகனமான தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடவில்லை என்றால் அவர்களிடம் ரூ.10,000 வசூலிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பதிவு செய்யாமல் வாகனங்களை இயக்கினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments