செந்தலையில் நன்கொடை வசூலிப்பது போல வந்து செல்போனை திருடிச் சென்ற பெண் - இளைஞர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பு

இன்று நன்கொடை வசூலிப்பது போல வந்து ஒரு விட்டில் செல்போனை திருடிச் சென்ற பெண்ணை இளைஞர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.


செந்தலையில் நட்பு பார்வையற்றோர் பொது நல அறநிலை அறக்கட்டளை என்ற நன்கொடை ரசீது மற்றும் அடையாள அட்டையுடன் ஒரு பெண் ஊரில் வசூல் செய்துள்ளார் அப்போது மாருதிப்பட்டினம் தெருவில் ஒரு வீட்டில்  தண்ணீர் கேட்டுள்ளார் தண்ணீரை வாங்கி குடித்து விட்டு அந்த பெண் சென்றுள்ளார் பின்பு அந்த வீட்டில் இருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது.நன்கொடை வசூலிக்க வந்த அந்தப் பெண் திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றுப்பகுதியில் அப்பெண்னை தேடினர் பின்பு சிறிது நேரம் கழித்து செந்தலை ஈசிஆர் சாலை பகுதியில் அந்த பெண் நடந்து செல்வதை கண்ட இளைஞர்கள் பிடித்து விசாரித்தனர் அப்போது நான் எதுவும் எடுக்கவில்லை என்று அந்த பெண் கூறினார். பின்பு அந்தப் பெண்ணின் கைப்பையை வாங்கி சோதித்தபோது பையின் உள்ளே செல்போன் இருந்தது தெரியவந்தது.

நட்பு பார்வையற்றோர் பொது நல அறநிலை அறக்கட்டளை என்ற நன்கொடை ரசீதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. இதுபோன்ற போலியாக ரசீதுகளை அடித்துக்கொண்டு ஏமாற்றுவதும் இது போன்ற திருட்டில் ஈடுபடுவதும் நடைபெற்றுவருகின்றது.

திருட்டில் ஈடுபட்டு முன்னுக்கு பின் முரணான பதில் கூறிய அந்த பெண்ணை இளைஞர்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.விழிப்புணர்வு:
இது போன்று பல ஊர்களில் நன்கொடை ரசீதுகளை வைத்துக்கொண்டு பல பெண்கள் வசூல் செய்து வருகின்றனர். எனவே அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது போலியாவும் இருக்கலாம் எனவே பொதுமக்கள் இதுபோன்று வசூல் செய்ய வரும் பெண்கள் அல்லது ஆண்களை வீட்டு வாசலிலேயே வைத்து நன்கொடையை வழங்கி அனுப்பி விடுவது சிறந்தது... 
உதவி செய்யும் குணம் என்பது அது மிகவும் சிறந்த குணம், உதவி செய்தாலும் நமது உடமைகளை பொருள்களை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments