மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை.!!மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற  மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்தர் அப்சர் என்ற மாணவரும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கார்த்திகேயன் என்ற மாணவரும் நீளம் தாண்டுதலில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்கள். மேலும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் நவீன் மூன்றாம் இடமும்  பிடித்து மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments