மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளபோட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி!!மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளபோட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளபோட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மும்முறை தாண்டுதலில் (Triple jump) மிக மூத்தோர்  (Under_19) பிரிவில்  இரா.சக்திவேல் மற்றும் மூத்தோர் (under17) பிரிவில் பா.தனுஷ்குமார்  ஆகிய இருவரும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் நீளம் தாண்டுதலில் மூத்தோர் பிரிவில் பா.தனுஷ்குமார் மீண்டும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிக்கு மாவட்ட அளவில் மூன்று தங்கங்கள்          பெற்று தந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் அவர்களுக்கும், பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments