உள்ளாட்சி தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டையில் உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்த கண்காட்சி நடத்துதல், கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு தெரிவித்தல், பூர்வாங்க பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சி தலைவர்களைக்கொண்டு கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறைகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள் உள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொண்டு கிராம சபைக்கூட்டத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments