செங்கோட்டையில் இருந்து மதுரை, திருச்சி தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறைக்கு இன்று அக்டோபர் 24 தீபாவளி முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை இடையே இயங்கி வரும் 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து, ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை - செங்கோட்டை
அக்டோபர் 24 தீபாவளி முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 சேவை தொடங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.
செங்கோட்டை - மயிலாடுதுறை
அக்டோபர் 25 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 14 பெட்டிகளுடன் இயங்கும்.
வரலாற்று சிறப்பு இடங்கள்: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் பயணிக்கும் வழித்தடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. செங்கோட்டையை சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா தலங்கள், பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கர நாராயண சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்லில் இறங்கி பழனி முருகன் கோயில், திருச்சி மலைக்கோட்டை மற்றும் சுற்றுலா தலங்கள் தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஆன்மிகத் தலங்கள் என, பல்வேறு சிறப்புகள் கொண்ட ஊர்களுக்கு செல்ல வசதி ஏற்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.