பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயக்கப்படும் திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (அக்டோபர் 24) ஒரு நாள் மட்டும் ரத்துபட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயக்கப்படும்  திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (அக்டோபர் 24) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

திருவாரூர் காரைக்குடி இடையே தற்போது வாரத்தில் 5 நாட்கள் (சனி ஞாயிறு தவிர) பகல் நேரத்தில்
எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் வண்டி எண் 06041/06042 சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல்  இயக்கப்பட இருப்பதால் 

24-10-2022 (திங்கள்கிழமை) வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லா விரைவு கட்டண சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது...

திருவாரூர் காரைக்குடி சிறப்பு ரயில் இரு மார்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த ரயிலில் பயணிக்க எண்ணுவோர் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். 

தகவல்: திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கம்& திருவாரூர் பாஸ்கரன், ஆலத்தம்பாடி வெங்கடேசன்   

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments