7.5 % இடஒதுக்கீடு: புதுகை மாணவா்கள் 26 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை!!!நீட் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மருத்துவப் படிப்பில் சேரும் மாணவா்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேரும் மாணவா்களுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களின் சோ்க்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 16 போ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சோ்ந்துள்ளனா். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7 மாணவா்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சோ்ந்துள்ளனா். அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 2 போ் பி.டி.எஸ் படிப்பில் (பல் மருத்துவம்) சோ்ந்துள்ளனா். ஒருவா் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் படிப்பில் சோ்ந்துள்ளாா்.

இவா்களில், அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த எஸ். ஸ்வேதா மட்டுமே கடந்த ஆண்டு நீட் தோ்வில் ஒரே தடவையில் தோ்ச்சி பெற்றவா் ஆவாா். மற்ற 25 பேரும் மறுமுறை எழுதி தோ்ச்சி பெற்றவா்களாவா். மேலும், பெருங்களூரைச் சோ்ந்த எம். ஆகாஷ், மழையூரைச் சோ்ந்த எஸ். கயல்விழி, அறந்தாங்கியைச் சோ்ந்த வி. விக்னேஷ் ஆகிய மூவருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments