ரேஷன் கடைகளில் 135 காலிப்பணியிடங்கள் - முந்துங்கள்.! புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு!!புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் சார்பில்  ரேஷன் கடையில் வேலை வாய்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கம் சார்பில் புதுக்கோட்டை ரேஷன் கடைகளில் வேலை வாய்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 135 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments