அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 13 பிரிவு போட்டிகளில் வெற்றி
அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூடத்தில் கடந்த 19 -10-2022 தொடங்கி 27-10-2022 முடிவுற்றது. இதில் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 
வாய்ப்பாட்டு இசை செவ்வியல்
1) பகவதி 
(ஆண்கள் பிரிவு) முதலிடம்
2) ரட்சிகா(பெண்கள் பிரிவு) இரண்டாம் இடம்
வாய்ப்பாட்டு இசை
 நாட்டுப்புறப் பாடல்
3)மகேஸ்வரன் ( ஆண்கள் பிரிவு) மூன்றாம் இடம்
நடனம் செவ்வியல்
4) மாதேஷ்(ஆண்கள் பிரிவு) இரண்டாமிடம்
நடனம் நாட்டுப்புறப் பாடல்
5) ஹரிஷ்( ஆண்கள் பிரிவு) இரண்டாம் இடம்
6) காளீஸ்வரி (பெண்கள் பிரிவு)
மூன்றாம் இடம்
காண்கலை இரு  பரிமாணம்
7) சிவராஜா (ஆண்கள் பிரிவு)
‌ மூன்றாம் இடம்
8) அபிநயா (பெண்கள் பிரிவு) இரண்டாம் இடம் காண்கலை மூன்று பரிமாணம்
9) மாரிமுத்து (ஆண்கள் பிரிவு) மூன்றாம் இடம்
10) ஈஸ்வரி (பெண்கள் பிரிவு) முதலிடம்
உள்ளூர் தொன்மை பொம்மைகள் செய்தல் 
11)ரேணுகா பரமேஸ்வரி (பெண்கள் பிரிவு ) முதலிடம்
கருவி இசை செவ்வியல் 
12) ஸ்ரீநாத் (ஆண்கள் பிரிவு)முதலிடம்
கருவிசை நாட்டுப்புற வாத்தியம்
13) ஹரி நந்தா(ஆண்கள் பிரிவு) முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 15 பிரிவு போட்டியில்  கலந்து கொண்டனர் இதில் 13 பிரிவு போட்டிகளில்  வெற்றி பெற்று கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் எதிர்வரும் 31-10 -2022 புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளனர் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் குமார், ஆய்வக உதவியாளர் கவிதா, பயிற்சி ஆசிரியர் அஜ்மியாபானு ஆகியோருக்கும்  பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர்  ஸ்டாலின், இன்றைய வழிபாட்டு கூட்டத்தினை நடத்திய ஆசிரியை புவனேஸ்வரி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் வாழ்த்துக்கள் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments