ஏ.டி.எம்.மில் வாடிக்கையாளர் விட்டு சென்ற ரூ.5 ஆயிரம் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் சம்பவத்தன்று 9 ஏ நத்தம் பண்ணையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கிளையில் பணம் எடுக்க சென்றார். அப்போது எந்திரத்தில் பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ரூ.5 ஆயிரம் வெளியே எடுக்கும் நிலையில் காணப்பட்டது. ஆனால் ஏ.டி.எம். மையத்தில் யாரும் இல்லாத நிலையில் பணம் மட்டுமே வெளியே தெரியும் படி இருந்ததால் அந்த பணத்தை அவர் எடுத்தார். மேலும் அந்த ரூ.5 ஆயிரத்தை வங்கியின் கிளை மேலாளரிடம் ஏட்டு பிரபு வழங்கினார். ஏ.டி.எம். மையத்திற்குள் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை எடுக்காமல் விட்டு சென்றிருக்கலாம் என கருதினர். அந்த பணம் யாருடையது என்பது குறித்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வங்கி அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். போலீஸ் ஏட்டுவின் இந்த செயலை சக போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments