காரைக்குடி – மானாமதுரை புதிய மின்மயப் பாதையில் முதன்மை தலைமை மின் பொறியாளர் ஆய்வு!
காரைக்குடி – மானாமதுரை ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 61 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை (28.10.2022) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி – மானாமதுரை இடையே சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பிறகு இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்.

பின்பு சிறப்பு ரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments