ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் கட்டி வைத்திருந்த 10 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை
ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் கட்டி வைத்திருந்த 10 ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 ஆடுகள் திருட்டு

ஆவுடையார்கோவில் அருகே மாவடி கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வீட்டில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 10 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகுடி போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை

இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆவணம், பெருங்குடி பகுதிகளில் ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். மீமிசல் அருகில் உள்ள கிளாறவயல் கிராமத்திலும் ஆடுகள் திருட்டு போய் உள்ளது.

தொடர்ந்து இப்பகுதியில் ஆடுகளை மர்மநபர்கள் திருடி செல்வது வாடிக்கையாகியுள்ளது.

எனவே போலீசார் உடனடியாக ஆடு திருடும் மர்மநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments