படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிடுச்சு லீவு விடுங்க: "லீவு மட்டும் விடுங்க, எங்க மனசுல உங்களுக்கு கோயில் கட்றோம்" "செல்லம்ல.. ப்ளீஸ்.. லீவ் விட்ருங்க.. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பி கெஞ்சிய 2K கிட்ஸுகள்!அதிர்ச்சியில் உறைந்த 90'ஸ் கிட்ஸுகள்!






புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி, மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிறன்று பெய்த மழையைத் தொடர்ந்து, அடுத்தநாள் திங்கள்கிழமைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு, அவரது இன்ஸ்டாகிராமில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இன்ஸ்டாவில் வந்த மாணவர்களின் விடுமுறை கோரிக்கைகளை ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகளை பலரும் பகிர்ந்துவருகின்றனர். ஆட்சியர் கவிதா ராமுவின் இன்ஸ்டா பக்கத்தில் விடுமுறை கோரிய மாணவர்களின் அன்பு கெஞ்சல்களில் சில...










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments