பனைமரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


பனைமரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 10 இலட்சம் பனை விதைகளை விநியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவீதம் மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும். 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், இப்பயிற்சியினைப் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம்  மானியத்தில் உபகரணங்கள் விநியோகிப்பதற்கும் பனையோலைப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பனைமரம் எறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னவைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு இலட்சம் வழங்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த விருதுக்கான போட்டியில் 'கலந்து கொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அரசு அறிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments