எஸ்.பி.பட்டினத்தில் ஏழைகளின் மக்கள் குரல் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




எஸ்.பி.பட்டிணத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் நிழற்குடை திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் ஏழைகளின் மக்கள் குரல் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. 

அறக்கட்டளை தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார், அறக்கட்டளை துணை ஒருங்கிணைப்பாளர் நய்னார்முகமது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில  தலைவருமான நவாஸ் கனி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்ரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநிலம்  தலைவர் ஜவாஹிருல்லா MLA உட்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை அமைப்பாளர் சாம்புஅலி நன்றி கூறினார்.

நவாஸ் கனி MP‌ 

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழாவிற்கு வருகைதந்த இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில  தலைவருமான   கே_நவாஸ்கனி அவர்கள்  திறந்து வைத்தார்கள் 'ஏழைகளின் மக்கள் குரல் அறக்கட்டளை' சார்பாக  ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்கள். சமுக நல்லினக்க உரை நிகழ்த்தினார்கள் 

ஜவாஹிருல்லா MLA
 
Sp பட்டனம் ஏழைகளின் மக்கள் குரல் அறக்கட்டளை சார்பில்  அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்வு   பேராசிரியர் m.h.ஜவாகிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஏழைகளின் மக்கள் குரல் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் சாவியை கொடுத்து
சமுக நல்லினக்க உரை நிகழ்த்தினார்கள் 

இதில் திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் வாழும் நரிக்குறவர் மாணவிகளுக்கு 17 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியும் இரத்தமும் கொடுத்ததை இன்று அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் மேடைக்கு வந்து தமுமுக வை பாரட்டியும் நன்றியும் தெரிவித்து தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நெகிழ்ச்சியடைய வைத்தனர் நரிக்குறவர் மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்ககா குரல் கொடுத்தையும் 
தேசிய நல்லாசிரியர் உதயகுமார் நினைவு படுத்தினார் . 










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments