மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பெ.நடராஜன் அவர்கள் பார்வை




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மணமேல்குடி 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2 ம் நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது.

 இப்பயிற்சியில் இரண்டாவது நாள்  நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன   முதல்வர் முனைவர் பெ. நடராஜன் அவர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி புளோரா அவர்கள் ஆகியோர்  பயிற்சி மையத்தை பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

மேலும் நான்கு அறைகளில்  பயிற்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். 
தமிழக அரசால் தொடங்கப்பட்ட  எண்ணும் எழுத்தும் திட்டத்தை மிகச் சிறந்த முறையில் வகுப்பறையில் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற வேண்டு
கோளையும் கேட்டுக்கொண்டார்.   

பார்வையின் சமயம்   பயிற்சியின் மைய ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் முனைவர் ஆர் கோபாலகிருஷ்ணன் , வட்டார கல்வி அலுவலர் திரு அன்பழகன் மற்றும்  வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி  சிவயோகம் ஆகியோர் உடனிருந்தனர்.

இப் பயிற்சியில் மணமேல்குடி ஒன்றியத்திலிருந்து 186 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மற்றும் கருத்தாளர்களாக ஆசிரியர்கள்   செயல்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு பழனி ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments