தீபாவளி பண்டிகையையொட்டி சென்னைக்கு திருவாரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்


தீபாவளிறும் இதர நகரங்களிலிருந்து பண்டிகையினையொட்டி சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து திருவாரூர் வழியாக கூடுதல் ரயில்களை இயக்கிட வேண்டும் என தென்ன ரயில்வேக்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அதன் செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாநில தலைநகரான சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் பணி நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது பாரம்பரிய பண்டிகைகளை தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என அனைவரும் விரும்புவர். அதன்படி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்திருந்தாலும் அவைகள் போதுமான அளவிற்கு இல்லை. இது போன்ற நாட்களில் ஆம்னி பேருந்துகளினுடைய கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. சாதாரண சாமானியன் ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய இயலாத சூழலும் நிலவி வருகிறது. ரயில்கள் வெகுஜன வாகனமாக இருந்தாலும் போதுமான அளவிற்கு இயக்கப்படுவதில்லை. அப்படியே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவைகள் ஓரிரு வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

கிழக்கு டெல்டா பகுதியான காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்ககோரி எத்தனை முறை
கோரிக்கை வைத்தாலும் என்ன காரணத்தினாலோ இந்த தடத்தில் அவைகள் இயக்கப்படுவதில்லை. 

தெற்கு ரயில்வே பொதுச் மேலாளர் கிழக்கு டெல்டா மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கும், காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க முன்வர வேண்டும். 

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிட வழி செய்து தர வேண்டும். அப்படி இயக்கும் சிறப்பு ரயில்களுக்கு பேரளம், நன்னிலம், முத்துப்பேட்டை போன்ற ஊர்களுக்கு கண்டிப்பாக நிறுத்தம் வழங்கிடவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

நன்றி : திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் & தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments