மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்!!மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளித்  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இன்று (17.10.2022) மணமேல்குடி ஒன்றியத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வட்டார கல்வி அலுவலர்  மதிப்புக்குரிய செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. 

வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்  ஆகியோரின் முன்னிலையில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் , எண்ணும் எழுத்தும் தொடர்பான செயல்பாடுகள் குறித்தும், எமிஸ் இணையதளத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க ப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், தமிழக அரசு கொண்டுவரப்பட்ட எழுத்தறிவு திட்டமான புதிய பாரத திட்டம் குறித்தும், பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து  பள்ளியில் சேர்ப்பது குறித்தும் கலந்து பேசப்பட்டது.

 இந்நிகழ்வில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திருமதி வாசுகி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

இந்நிகழ்வில் 67 தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி கணக்காளர் கலைச்செல்வன் இயன்முறை மருத்துவர் செல்வகுமார் சிறப்பாசிரியர்கள் கோவேந்தன் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments