BMW: 230 கி.மீ வேகம்; ஃபேஸ்புக் லைவ் - 4 இளைஞர்களின் உயிரைப் பறித்த `அலட்சியம்!'




    சமீபகாலமாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவது அதிகரித்துள்ளது. அதுவும் வித்தியாசமாக எதாவது இருந்தால் அதை உடனே ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் காரில் சென்று கொண்டிருந்ததை ஃபேஸ்புக்கில் லைவாக காட்டியபோது கார் விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது நண்பர்களுடன் பி.எம்.டபிள்யூ காரில் நேற்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். கார் 230 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. உடனே காரில் இருந்த ஒருவர் கார் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதை அப்படியே தனது ஃபேஸ்புக்கில் லைவாக ஒளிபரப்புக்கொண்டே சென்றார். அதோடு இன்னும் வேகமாக போ என்று சொல்லிக்கொண்டே வந்தனர். ஃபேஸ்புக் லைவாக ஒளிபரப்பியதால் கார் ஓட்டுவதில் கவனம் திசை திரும்பியது.

இதனால் எதிரில் வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிக்கொண்டது. கார் மோதிய வேகத்தில் அதன் இன்ஜின் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. காரில் பயணம் ஒருவரின் தலையும், கையும் துண்டாகி பல மீட்டர் தூரத்தில் விழுந்தது. நான்கு பேர் காரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்துக்கேள்விப்பட்டு உடனே போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கார் விபத்தில் சிக்கிய பிறகும் ஃபேஸ்புக் லைவ் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் 4 பேரும் இறந்துவிட்டனர் என்று சொல்வதுகூட ஃபேஸ்புக்கில் பதிவாகி இருந்தது. காரின் ஸ்பீடு மீட்டரில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கிவிட்டது. அதோடு காரில் இருந்த 4 பேரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர் என்று மீட்புப்பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் தெரிவித்தார். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலியாபூர் என்ற இடத்திற்கு அருகில் இச்சம்பவம் நடந்தது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments