மல்லிப்பட்டிணம் மனோரா சுற்றுலா தளத்தில் சிறுவர் பூங்கா, படகு குழாம், பேபர் பிளாக் நடைபாதை, உணவகம், மனோரா பயிற்சி மையங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மனோரா சுற்றுலா தளத்தில் படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

ஊரக உள்ளாட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் மனோராவில் ரூ.160.84 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, படகு குழாம், பேபர் பிளாக் நடைபாதை, உணவகம் மற்றும் மனோரா பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார். 
 
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம்,சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, அரசு அதிகாரிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முகநூல் பதிவில் 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுத்தில் உருவான 'புதையல்' திரைப்படத்தில் மனோரா சிறப்பை பற்றி எழுதியிருப்பார்.
கலைஞர் அவர்களால் புகழப்பட்ட மனோராவில் ரூ.160.84 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, படகு குழாம், பேபர் பிளாக் நடைபாதை, உணவகம், மனோரா பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments