ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்
 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் – 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி வழியாக இயக்கப்பட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.45 புறப்பட்டு காலை 11 மணியளவில் இராமேஸ்வரம் சென்றடைந்தது.

அதேபோல் மறுமார்க்கமாக நேற்று மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் இரவில் அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி மக்கள் 16 வருடங்களுக்கு பிறகு நேரடியாக‌ இரவு நேர   ரயில் மூலமாக சென்னைக்கு சென்றனர்!

தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து, ராமேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால்  ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் நிரம்பி காணப்பட்டது

தினசரி சென்னைக்கு ரயில் இயக்க கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ராமேஸ்வரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல்.  அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி மக்கள் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக தங்கள் பகுதியில் இருந்து இரவுநேர சிறப்பு ரயில் மூலமாக எவ்வித சிரமமும் இன்றி சென்னைக்கு பயணித்தனர் தெற்கு ரயில்வே இடையூறுகள் களைந்து மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய இரவுநேர தினசரி விரைவு ரயில் சேவையை மீண்டும் இந்த சிறப்பு விரைவு ர‌யி‌ல் இயக்கப்பட்ட நேரத்திலேயே இயக்கிட வேண்டும் என்பதே அனைத்து பகுதி மக்களின் கோரிக்கை

இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் பலரும், இந்த சிறப்பு ரயில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும், அதேசமயம் சென்னையில் இருந்து திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் தினசரி ரயிலை இயக்கினால், அறந்தாங்கி பேராவூரணி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ரயில் பயணிகளின் கோரிக்கை மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது

தினசரி சென்னைக்கு ரயில் இயக்கினால்  இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments