மயிலாடுதுறை- செங்கோட்டை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட விரைவு ரயில்




25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மெயின் லைன் ரயில் பாதையில் சென்னை - செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல பாதையாக மாற்றும் பணிக்காக இந்த ரயில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை, தஞ்சை, திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி ஆகிய வழித் தடங்களில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றதால் ,இந்த ரயில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

தற்போது இந்த வழித்தடம் முற்றிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டதால் இன்று முதல் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டையை சென்றடையும்

















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments