மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது





மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரெயில், வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது. இதில், விரைவாக வந்த ரெயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரெயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்து உள்ளது.

 இதனை மேற்கு ரெயில்வே மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஜே.கே. ஜெயந்த் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் 4 காட்டெருமைகள் வரை சிக்கியுள்ளன. எனினும், என்ஜினின் செயல் பகுதி பாதிக்கப்படவில்லை. இதனால், சில நிமிடங்களில் காட்டெருமைகளின் உடல்கள் நீக்கப்பட்டு, ரெயில் புறப்பட்டு சரியான நேரத்தில் காந்திநகரை சென்றடைந்து உள்ளது. 

காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரெயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் மோடி பயணமும் மேற்கொண்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments