திருவாரூர் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அமைக்கக் கோரிக்கை

திருவாரூர் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் ப. பாஸ்கரன், தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

திருவாரூர் சந்திப்பிலிருந்து காலை 8.10 முதல் 8.15 வரை நான்கு திசைகளுக்கும் ரயில்கள் இயங்குகின்றன. இந்த நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், அவர்கள் பயணச்சீட்டு பெறுவது கடினமாக உள்ளது.

தற்போது,இரண்டு கவுண்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. அதில் ஒரு கவுண்டர் முன்பதிவுக்கென உள்ளது. எஞ்சிய ஒரு கவுண்டர் வழியாக அனைவரும் உரிய நேரத்தில் பயணச்சீட்டு பெற இயலவில்லை.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, திருவாரூர் சந்திப்பில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில் ஏடி எம் இயந்திரம் அமைக்க வேண்டும். மிக மோசமான நிலையில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தையும் சீரமைக்க வேண்டும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments