மணமேல்குடி ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி!!மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதம், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு:

மணமேல்குடி ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சியினை மதிப்பிற்குரிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பார்வையிட்டு பயிற்சியின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்கள் கூறியதோடு மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி கற்றல் கற்பித்தலை சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் நான்கு அறைகளில் நடைபெற்ற பயிற்சி மையத்தினை பார்வையிட்டு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை சிறப்பாக செய்திருப்பதாக கூறி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதம், வீரப்பன், இல்லம் தேடி கல்வி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பழனி ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments