கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்


கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்  (24.11.2022) மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளரும் வர்த்தகர் அணியின் மாநில செயலாளருமாகிய S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றி தொடக்கி வைத்தார்.  மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1
டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் கோட்டைபட்டிணத்தில் நடத்துவது.

தீர்மானம் 2
28.11.22 அன்று மாவட்ட பொதுக்குழு மாவட்ட அலுவலகத்தில் நடத்ததுவது.

இறுதியாக அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மைதீன் (எ) செல்லாத்தா நன்றியுரை ஆற்ற கூட்டம் நிறைவுபெற்றது.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments