டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே துறையை கண்டித்து வருகிற நவம்பர் 28ஆம் தேதி நாகப்பட்டினம் & திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்- நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு MP அறிவிப்பு
டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே துறையை கண்டித்து வருகிற நவம்பர் 28ஆம் தேதி நாகப்பட்டினம் & திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்- நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு MP அறிவிப்பு
வருகிற 28ஆம் தேதி  திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் அனைத்து கட்சிகள் சார்பில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி அளித்துள்ளார்.

நாகை மற்றும் திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் 28ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் நடத்தப்படும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு திருவாரூரில் பேட்டி

திருவாரூர் தனியார் அரங்கில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தலைமை தாங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரயில்கள் குறித்த கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் போது அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டும், நிறைவேற்றப்படாமலும் இருக்கின்றன.

இதனால் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கம், ரயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள். எனவே டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து 21ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஒருமித்தமாக முடிவு செய்யப்பட்ட நிலையில் 21ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு மாநில கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதனால் 21ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் ஒத்திவைக்கப்பட்டு வரும் 28ஆம் தேதி ரயில் முறை போராட்டம் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென விவசாயிகள் ஓராண்டு போராடிய பிறகு அந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது.

அதேபோல டெல்டா பகுதி மக்களின் தொடர்வண்டி கோரிக்கையை நிறைவேறும் வரை இந்த போராட்டம் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டமாக நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 28-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில் உபயோகிப்பார்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் தொடங்க உள்ளது. திருவாரூரில் மூன்று இடங்கள் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒரு இடம் என மொத்தம் நான்கு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

ரயிலை இயக்குவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்தார். இந்த போராட்டத்தில் 25000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல், இது அனைவரது பிரச்சனை, நம் பிரச்சனை,உங்கள் பிரச்சனை எனவே அனைவரும் ஒன்றுபட்டு போராடி கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments