அறந்தாங்கி - சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக புதுக்கோட்டை வழியாக குமுளி வரை அரசு பேருந்து (தினசரி) & புனலூர் வழியாக வேளாங்கண்ணி எர்ணாகுளம் ரயில் (வாரத்தில் ஒரு நாள்) வசதிகள் உள்ளது
அறந்தாங்கி - சபரிமலை  ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக புதுக்கோட்டை வழியாக குமுளி வரை அரசு பேருந்து (தினசரி) & புனலூர் வழியாக வேளாங்கண்ணி எர்ணாகுளம் ரயில் (வாரத்தில் ஒரு நாள்) வசதிகள் உள்ளது

அறந்தாங்கியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக புதுக்கோட்டை தேனி வழியாக குமுளி வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

அறந்தாங்கி நகரம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் சபரிமலைக்கு சென்று வர ஏதுவாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரண்டு பேருந்துகள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்து இயக்கப்படுகிறது.

பேருந்து இயக்கப்படும் வழி 

புதுக்கோட்டை, மணப்பாறை, திண்டுக்கல், தேனி, கம்பம்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நேரம். அறந்தாங்கி - குமுளி 

அறந்தாங்கி - காலை 03:30am

புதுக்கோட்டை - காலை 04:50am

குமுளி - 12:30pm

அறந்தாங்கி - போடிநாயக்கனூர் 

அறந்தாங்கி - மாலை 04:20pm

புதுக்கோட்டை - மாலை 05:50pm

தேனி - 10:00pm

குமுளி - அறந்தாங்கி 

குமுளி - மதியம் 02:10pm

தேனி - மதியம் 04:00pm

அறந்தாங்கி - இரவு 10:40pm 

போடிநாயக்கனூர் - அறந்தாங்கி 

போடிநாயக்கனூர் - 09:00am

தேனி - 09:15am

அறந்தாங்கி - 04:00pm

சபரிமலைக்கு அறந்தாங்கியில் இருந்து செல்லும் பக்தர்கள் இந்த குமுளி வரை செல்லும் பேருந்தை பயண்படுத்தி குமுளி வரை சென்று குமுளியில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் ஜீப்கள் இயக்கப்படுகிறது அதன் மூலம் பம்பைக்கு சென்றடையலாம்.

குறிப்பு : அறந்தாங்கி போடிநாயக்கனூர் பேருந்தில் செல்பவர்கள்.... தேனியில் இறங்கி கம்பம் வழியாக குமளிக்கு மாற்று பேருந்தில் செல்லுங்கள்.. அங்கே இருந்த சபரிமலை செல்லுங்கள் அல்லது தேனியில் இருந்து சபரிமலை வரை சிறப்பு பேருந்துகள் இருந்தால் அதில் ஏறி கொள்ளுங்கள்

அறந்தாங்கியில் இருந்து சபரிமலைக்கு சென்று வர இரயில் வசதி 
அறந்தாங்கி இரயில் நிலையத்தில் இருந்து வாரம் ஒருமுறை இரயில் இயக்கப்படுகிறது.

06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 01.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு திங்கட்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்
அறந்தாங்கி - புனலூர் 

அறந்தாங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு - 10.16 / 10.18

புனலூர் திங்கட்கிழமை அதிகாலை - 06.50 / 06.55

புனலூர் - அறந்தாங்கி 

புனலூர் சனிக்கிழமை மாலை - 05.40/ 05.45

அறந்தாங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை - 01.23 / 01.24

சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

தமிழக டெல்டா மாவட்ட ஐயப்பசுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை , பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி ,மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை  ,  புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம்(கொச்சி) வரை இயக்கப்படுகிறது

ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏ/சி, முன்பதிவில்லா பெட்டிகளோடு மொத்தம் 14 பெட்டிகளோடு இயங்கும்.

இந்தச் சிறப்பு இரயிலுக்கு புனலூர் இரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை இரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments