மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி!!



மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செய்துல் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைத்திறன்ளை வெளிக்கொணரும் விதமாக நடனம், பாடல், மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் இயன் முறை மருத்துவர் செல்வகுமார் பள்ளி ஆயத்த பயிற்சி மைய சிறப்பாசிரியர் நதியா, உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோர்  செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் கலைத் திருவிழா ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சபரிநாதன், மதியழகன், சகாயராஜ், அருளானந்து, ஜெய்சங்கர் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்வுடன் பங்கேற்று நடனம் பாடல் மாறுவேட போட்டி திருக்குறள் ஒப்பித்தல் ஆகியவற்றில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments