நவ.26 நவ.27 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்! மாவட்ட ஆட்சியர் தகவல்!!



இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2023 -ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 09.11.2022 அன்று வெளியிடப்பட்டது. 09.11.2022 முதல் 08.12.2022 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன.

இந்நேர்வு தொடர்பாக எதிர்வரும் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய இருதினங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை நாளது தேதிமுதல் 08.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும், 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு சிறப்பு முகாம் நாட்களின்போது அனைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 09.00 மணிமுதல்
மாலை 5.00 மணிவரை அளிக்கலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments