கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா
 கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மாணவர்களின் பல்வேறு கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக அரசு பள்ளிகளில் கலைத்திருவிழாவை வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலைத்திருவிழா நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை பள்ளி தலைமை  தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

இதில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஜமாஅத் நிர்வாகிகள்  உறுப்பினர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments