இரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நவம்பர் 28 தேதி முத்துப்பேட்டையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் அழைப்பு
இரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முத்துப்பேட்டை இரயில் மறியல் போராட்ட அழைப்பு டெல்டா பகுதியை புறக்கணித்து வரும் தெற்கு இரயில்வேயை கண்டித்து மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

நாள்: 28.11.2022 திங்கட்கிழமை நேரம் : காலை 09.00 மணியளவில் இடம் : முத்துப்பேட்டை இரயில் நிலையம்.

தலைமை: உயர்திரு. க.மாரிமுத்து B.A.,
திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர்.

நமது பகுதிக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மறியல் பேராட்டம் நடைபெற உள்ளது.

* 130 வருடங்களுக்கு மேலான பாரம்பரியமிக்க முத்துப்பேட்டை இரயில் நிலையத்தை மீண்டும் தரம் உயர்த்த வேண்டும்.

* தற்போது நமது தடத்தில் சென்று வரும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி மற்றும் செகந்திராபாத் - இராமேஸ்வரம் இரயில்களை முத்துப்பேட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* சென்னையில் இருந்து நமது பகுதியில் முன்பு செயல்பட்டு வந்த கம்பன் விரைவு வண்டி / காரைக்குடி - சென்னை பகல் நேர இரயில்களை மீண்டும் இப்பகுதியில் தொடங்கிட வேண்டும். புதிய இரயில்களும் முத்துப்பேட்டையில் நின்றிட வேண்டும்.

* முன்பு இருந்தது போல் இரயில்நிலையம் தரம் உயர்த்தப்பட்டு புக்கிங் கவுண்டர் திறந்திட வேண்டும்

* திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் சென்னை செல்வதற்கான விரைவு இரயில்களை தொடங்க ஏதுவாக அனைத்து கேட்டுகளுக்கும் கேட் கீப்பர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இப்படிக்கு: -

அனைத்து கட்சியினர் முத்துப்பேட்டை ஜமாத்தினர் ரோட்டரி சங்கம் & லயன்ஸ் கிளப் மற்றும் மக்கள் இயக்கங்கள் 

தகவல்  தொடர்புக்கு: 9444 454 755 / 9894 748 454 / 9443974185


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments