மணமேல்குடி ஒன்றியம் கோலேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோலேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25-22-22 அன்று நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அல்போன்ஸ்  அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்.  அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்ற கலைத்திருவிழா குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டது.

பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது சுற்று சுவர் அமைப்பது போன்ற தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் ஆன்லைன் கல்வி ரேடியோ குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்கள்.

 பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு சேக் அலாவுதீன் அவர்களும் பள்ளியில்  பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி விஜி அவர்களும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்லம்மாள் கருப்பையா அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.

இல்லம் தேடி கல்வி மாவட்ட பொறுப்பாளர் திரு கண்ணன் அவர்களும் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வாழ்த்துரையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அல்போன்ஸ் அவர்களுக்கும் மற்றும் உதவி ஆசிரியர்  திரு முருகன் அவர்களுக்கும்  பாராட்டுகளும் வாழ்த்துக்களும்  தெரிவிக்கப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments