சைக்கிளில் லடாக் சென்று வந்த தொண்டி வாலிபர்




சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தொண்டியை சேர்ந்த வாலிபர் முகமது அப்துல்லா 18, அரசு வழங்கிய சைக்கிளில் எல்லைப்பகுதியான லடாக் வரை சென்று திரும்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தெற்கு தோப்பை சேர்ந்த செய்யது அபுதாகிர் மகன் முகமது அப்துல்லா 18. பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் தொண்டியில் ஒரு பேக்கரியில் வேலை செய்கிறார். பிளஸ் 2 படித்த போது அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

அந்த சைக்கிளில் ஆக.31ல் பயணத்தை துவக்கிய இவர், கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உ.பி., மாநிலங்கள் வழியாக பயணம் செய்து நவ.24 ல் லடாக் சென்றார். நேற்று முன்தினம் தொண்டி வந்தடைந்தார்.

முகமதுஅப்துல்லா கூறுகையில், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சைக்கிள் பயணம் சென்றேன். இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சைக்கிளில் செல்ல உள்ளேன், என்றார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments