புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். 28 ஆயிரத்து 472 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பட்டியலை கலெக்டர் கவிதாராமு வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி பெற்றுக்கொண்டார். அதன்பின் கலெக்டர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 78 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்களும், 65 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 பேர் இடம்பெற்றுள்ளனர். 

2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 63 ஆயிரத்து 126 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி வரை தொடர் திருத்தம் நடைபெற்றது.

இந்த பணியில் 2 ஆயிரத்து 352 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 70 பெண் வாக்காளர்கள் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 422 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 105 ஆண் வாக்காளர்கள், 16 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 28 ஆயிரத்து 472 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரம்:

சட்டமன்ற தொகுதி

ஆண்

பெண்

மூன்றாம் பாலினத்தவர்

மொத்தம்

அறந்தாங்கி

1,15,991

1,18,277

5

2,34,273

கந்தர்வகோட்டை (தனி)

1,00,509

99821

18

200348

விராலிமலை

1,08,583

1,10,667

13

2,19,263

புதுக்கோட்டை

1,17,319

1,22,563

21

2,39,903

திருமயம்

1,11,591

1,17,043

4

2,28,638

ஆலங்குடி

1,07,131

1,10,516

4

2,17,651

மொத்தம்

6,61,124

6,78,887

65

13,40,076

 
ஆண்-பெண்- மூன்றாம் பாலினத்தவர்- மொத்தம் 
கந்தர்வகோட்டை (தனி)-1,00,509-99821-18-200348 
விராலிமலை-1,08,583-1- 10,667- 13- 2,19,263 
புதுக்கோட்டை- 1,17,319- 1,22,563- 21- 2,39,903. 
திருமயம்-1,11,591- 1,17,043- 4- 2,28,638 
ஆலங்குடி- 1,07,131- 1,10,516- 4- 2,17,651 
அறந்தாங்கி-1,15,991- 1,18,277- 5- 2,34,273 

மொத்தம் - 6,61,124- 6,78,887- 65- 13,40,076.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments