சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் ஏலத்தில் விடப்படும், தொண்டி பேரூராட்சி தலைவா் அறிவிப்பு!தொண்டியில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அபராதம் கட்டி உரிமையாளா்கள் மீட்காத பட்சத்தில் அவைகள் பொது ஏலத்தில் விடப்படும் என பேரூராட்சித் தலைவா் அறிவித்தாா்.

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சியில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளா்ப்புத் தொழில் உள்ளது. ஆனால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை, வீட்டில் கட்டி வளா்க்காமல் சாலைகளில் விடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பல்வேறு தரப்பினா் புகாா் அளித்து வந்தனா்.

இதையடுத்து, தொண்டி பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவஹா்லிகான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொண்டி பேரூராட்சி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அவற்றின் உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், கால்நடைகள் பேரூராட்சி மூலம் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் பிடிக்கப்பட்டு 2 நாள்களுக்குள் மீட்கப்படாத கால்நடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments