சாலை விபத்தில் உயிரிழந்த ராவுத்தர் நெய்னா முகமது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - தமுமுக கோரிக்கை!






            மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் (ராவுத்தர் நெய்னா முகமது) உயிரிழந்தார். அவருடைய அண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை விபத்தில் உயிரிழந்த ராவுத்தர் நெய்னா முகமதுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும்,இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

உயிரிழந்த ராவுத்தர் நெய்னா முகமது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தமுமுக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.  படுகாயம் அடைந்த அவருடைய அண்ணன் பாதுஷா அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .

பலமுறை கோரிக்கைகள் வைத்தும் , கிழக்கு கடற்கரைச் சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான  நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் விபத்துக்கள், உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுக்கப்படுகிறது.

தகவல்: முகமது மசூது, கோபாலப்பட்டிணம்.
த.மு.மு.க புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments