கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்! செவிலியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!!புதுக்கோட்டை அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் உதவித்தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். ஊட்டச்சத்து பெட்டகம் போதுமான அளவு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கிராம சுகாதார செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் ஒத்திகை போராட்டம் விரைவில் நடத்த உள்ளதாக மாநில தலைவர் இந்திரா தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments